கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் M.L.A.M ஹிஸ்புல்லா, இரண்டாவது நாளாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் M.L.A.M ஹிஸ்புல்லா நேற்றைய தினமும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
இதற்கமைய, இன்றைய தினமும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோரும் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.