மன்னாரில் ஆயிரம் கிலோ கிராமுக்கும் மேற்பட்ட மஞ்சள் கட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, நேற்று மாலை மன்னார் சாந்திபுரம் பகுதியில் வைத்து, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சுமார் ஆயிரத்து 380 கிலோ கிராம் மஞ்சள் கட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட குறித்த மஞ்சள் கட்டைகளை, நீர்கொழும்பு பகுதிக்கு வாகன மொன்றில் கடத்தி செல்ல முற்பட்ட போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.