இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இங்கிலாந்தின் southampton நகரில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 10.30 இற்கு ஆரம்பமாக உள்ளது.
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கமைய இடம்பெற்றுவரும் இந்தப் போட்டிகளில் இரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடரின் இரண்டு ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
இந்த அடிப்படையில் இரண்டிற்கு பூஜ்ஜியம் என்ற புள்ளிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கின்றது.