மெய்ப்பொருள் காண்பது அறிவு

உரிய நேரத்திற்கு பயணிக்காத இரயில்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

- Advertisement -

உரிய நேரத்திற்கு பயணிக்காத ரயில்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்துத்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ரயில் சேவைகள் பொது முகாமையாளர் டிலந்த பெர்ணாண்டோவுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

காலதாமதமின்றி ரயில்களை சேவையில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் நாளாந்தம் சுமார் 400 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், சுமார் மூன்று இலட்சம் பயணிகள் ரயில் சேவையைப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில், ரயில்கள் தாமதமாகி பயணித்துள்ளதன் விகிதாசாரம் 56 வீதமாக காணப்படுகின்ற அதேவேளை, 2018 ஆம் ஆண்டில் 59 வீதமாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த விடயங்களை கருத்திற் கொண்டே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz