இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது
இந்த சந்திப்பு சுகாதார அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே, இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதற் செயலாளர் வைத்தியர் சுஷில் குமார், உயர்ஸ்தானிகராலயத்தின் பொருளாதாரம் மற்றும் வணிகப் பிரிவின் அதிகாரி வைத்தியர் ராகேஷ் பாண்டே உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.