சம்மாந்துறைப் பகுதியில், சிறுபோக நெல் அறுவடை நிறைவடைந்து, பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்படுவதற்கிடையிலான சுமார் மூன்று மாத கால இடைவெளியில் வெற்று நிலக்காணிகளில் பாசிப்பயறு செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்படி, பயிர்செய்கையை கால்நடைகளிலிருந்து பாதுகாக்கும் வகையில், சூரிய சக்தி மூலம் வேலிகளுக்கு மின்னை வழங்கக்கூடிய சூரியசக்தி சாதனம் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரியும் விவசாய போதனா ஆசிரியருமான ஐ.எல்.பெளசுல் அமீன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சூரியசக்தி மூலம் வேலிகளுக்கு மின்னை வழங்கக்கூடிய 18 சூரியசக்தி சாதனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.