ஆணைக்குழுக்கள் அமைப்பதை விடுத்து, மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதே முக்கியமாகும் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
களுத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஆணைக்குழுக்கள் இருந்து பலனில்லை. அறிக்கை தயாரித்து அனுப்புவதில் பயனில்லை. ஆணைக்குழுக்கள் முக்கியமில்லை.
மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதே முக்கியம். 97 அறிக்கைகள் இருந்த போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க முடியாது போனது. எதற்கு ஆணைக்குழு வேண்டும்.
அந்தப் பொலிஸ்மா அதிபரைக் கூட இதுவரை நீக்க முடியவில்லை. இன்னும் பதில் பொலிஸ்மா அதிபரே உள்ளார்.
69 இலட்சம் மக்கள் வழங்கிய வாக்குளினால் பொலிஸ்மா அதிபரைக் கூட நீக்கிக் கொள்ள முடியாது என்றால் பயனில்லை. 90 அறிக்கைகள் இருந்தும் தாக்குதலை தடுத்துக் கொள்ள முடியாது என்றால் என்ன செய்ய வேண்டும்.
இவற்றை வைத்துக் கொண்டு தொடர்ந்தும் அறிக்கைகளை தயாரித்து அனுப்புவதில் பயனில்லை” என நீதியமைச்சர் அலி சப்ரி மேலும் குறிப்பிட்டார்.