நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்டவர்களுக்கு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில், மோதரை துறைமுகத்தை குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கி, அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பான பரிசீலனை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.