கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும்110 இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியில் இருந்து 11 டுபாயில் இருந்து 20 கட்டாரில் இருந்து 75 பேரும், இந்தியாவில் இரண்டு பேர் மற்றும் ஜப்பானில் இருந்து இருவர் உள்ளடங்களாக 110 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் குறித்த அனைவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் சோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் 63 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 6 ஆயிரத்து 610 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.