மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹற்றன் பிரதேசத்தில் குளவிக்கொட்டு : 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி

- Advertisement -

இருவேறு  பகுதிகளில்  குளவிக்கொட்டுக்கு இலக்கான  12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹற்றன், லெதண்டி தோட்டம் புரொடக் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 8 பேரும் அதேபோன்று மஸ்கெலியா – சாமிமலை, ஓல்டன் கிங்கோரா தோட்டத்தில்  தேயிலை மலையில் பணிபுரிந்த 4 பேருமே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

- Advertisement -

இச்சம்பவம்  இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்படி,  ஹற்றன், லெதண்டி தோட்டம் புரொடக் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 8 பேரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், இருவர் கடுமையா பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  நான்கு பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக  வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மஸ்கெலியா – சாமிமலை, ஓல்டன் கிங்கோரா தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான  4  பேரும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவர் சிசகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதுடன், ஏனைய மூவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹற்றன் பிரதேசத்தில் குளவிக்கொட்டு : 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி 1 ஹற்றன் பிரதேசத்தில் குளவிக்கொட்டு : 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி 2 ஹற்றன் பிரதேசத்தில் குளவிக்கொட்டு : 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி 3

தொடர்புபட்ட செய்திகள்

Related News

போதைப் பொருள் பாவனைக்கு வறுமையே காரணம் – துரித நடவடிக்கை என்கிறார் அங்கஜன்!

நல்லூர் பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் அவசியமான ரயில் கடவைகளை அடையாளப்படுத்தி அதனை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான பொறிமுறைகளை உருவாக்கி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச செயலகருக்கும், ரயில்வே திணைக்கள...

நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 748 தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 379 அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 748 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, களுத்துறை மாவட்டம் - பண்டாரகமை பிரதேச செயலாளர் பிரிவுக்கு...

சாய் பல்லவியுடன் இணையப்போகும் அந்த நகைச்சுவை நடிகர் யார்? விபரம் உள்ளே…

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி, அடுத்ததாக காளி வெங்கட்டுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் வெளியான "பிரேமம்" என்ற படம்...

ஓஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ள சூரரைப் போற்று…?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. இதன்படி, சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஏர் டெக்கான்...

Developed by: SEOGlitz