வீதி ஒழுங்கை சட்டம் இன்று முதல் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸ் வாகனப் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று காலை 6 மணி முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 10 மணிவரை கொழும்பின் சில பகுதிகளை மையமாக கொண்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்படி, காலி வீதி, ஹய்லெவல் வீதி, பேஸ்லைன் வீதி மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர – கோட்டே வீதிகளை மையமாக கொண்டு வீதி ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஶ்ரீ ஜயவர்தனபுர வீதியின் பொல்துவ சந்தியிலிருந்து, ஹோர்ட்டன் சுற்றுவட்டம் வரை இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், பேஸ்லைன் வீதியின் களனி பாலம் முதல் ஹய்லெவல் பேஸ்லைன் சந்தி வரை இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, ஹய்லெவல் வீதியின் அனுலா வித்தியாலயத்திற்கு அருகாமையிலிருந்து சம்புதத்வ ஜயந்தி மாவத்தை, தும்முல்ல சுற்றுவட்டம், தேர்ஸ்டன் வீதி, மாக்ஸ் பிரணாந்து மாவத்தை, நூலக சந்தி, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, மல்பார சந்தி மற்றும் பித்தளை சந்தி வரை இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும், காலி வீதியின் வில்லியம் சந்தி முதல் காலி முகத்திடல் வரை இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.