மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விஜயகலா மகேஷ்வரனுக்கு அழைப்பு

- Advertisement -

முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன்  அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய  குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள்  அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தடுப்புக்காவலில் இருந்து தப்பிச் செல்லமுற்பட்ட  போது உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் குறித்த சம்பவம் இயற்கையான மரணம் என  யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம்  தீர்ப்பளித்திருந்தது.

எனினும் நல்லாட்சி அரசாங்கத்தின்  காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனின் தலையீட்டின் பிரகாரம்  குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக   குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான  விசாரணைகளுக்காக முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன்  அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி  விசாரணை  ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தேங்காயின் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை திட்டம்!

தேங்காயின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையிலான திட்டமொன்று  தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் தேங்காய்களின் விலை உயர்வடைந்துள்ளமை தொடர்பில், தென்னைப் பயிர்ச்செய்கை...

நாட்டில் இயற்கையின் பாதிப்பு காரணமாக பாரிய உயிரிழப்புக்கள் பதிவு!

நாடு முழுவதும் ஏதேனும் ஓர் இடத்தில், இயற்கையின் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இதன் காரணமாக ஆண்டுதோறும்  நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. மேலும், உயிரிழப்பைவிட, பல மடங்கு பொருளாதாரச் சேதமும் ஏற்படுகின்றது. பலர்,  தங்களது வாழ்விடங்களையும்,  ஆண்டுக்கணக்கில்...

கிராமப்புற மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 313 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குவைத்திலிருந்து வருகைதந்த 7...

அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று!

COPA எனப்படும் அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கோப் மற்றும் கோபா என அழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான  நாடாளுமன்ற குழு மற்றும் அரச கணக்காய்வு குழுவின் உறுப்பினர்கள் கடந்த...

Developed by: SEOGlitz