மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியாவில் குடும்பங்களின் தகவல்கள் திரட்டும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

- Advertisement -

வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வாழும் குடும்பங்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா பிரதேச செயலாளர்  ந.கமலதாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- Advertisement -

மேலும், புதிதாக நியமனம் பெற்றுள்ள பட்டதாரிப் பயிலுனர்கள் பொது மக்களின் வீடுகளுக்கு வருகை தரும் போது அவர்களது அடையாளத்தினை உறுதிப்படுத்துவதன் ஊடாக  அவர்களினால் கேட்கப்படும் விபரங்களுக்கு  ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், குடும்ப விபர அட்டை அல்லது அதற்கு பதிலாக வழங்கப்பட்டுள்ள ஆவணம் 2019 வாக்காளர் இடாப்பு பட்டியல், குடும்ப அங்கத்தவர்களின் விபரங்கள், பிறப்புச் சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டை, திருமணச்சான்றிதழ், தொலைபேசி இலக்கம், கொடுப்பனவு விபரம், காணி ஆவணங்கள் என்பவற்றை பொதுமக்கள் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் வவுனியா பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் அதிகரிக்கும் அச்சநிலை – 873 பேருக்கு கொரோனா – உயிரிழப்பும் அதிகரிப்பு…!

நாட்டில் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றையதினம் 873 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது, பேலிய கொடை கொரோனா கொத்தணியுடன தொடர்புடைய 866 பேரும்,...

நுவரெலியா மாவட்டத்தில் 16 பாடசாலைகளுக்கு தேசிய பாடசாலை அந்தஸ்து!

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள 16 தமிழ்ப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர்...

இந்தியாவிலிருந்து தடுப்பூசி கொள்வனவு செய்வதற்கான ஆவணங்கள் சட்டமா அதிபரிடம்!

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறித்த கொள்வனவு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான சட்ட ரீதியான அனுமதியைப்...

தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – அதிகரிக்கும் தொற்றாளர்கள்..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 337 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது. பேலியக்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 330 பேரும், கைதிகள் 7 பேரும் இவ்வாறு தொற்றுடன்...

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சியினால் கோரிக்கை

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு அந்தநாட்டு எதிர்க்கட்சித் தலைவர் தத்துக் அன்வர் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். நம்பிக்கை கூட்டணி மற்றும் ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு கடிதம்...

Developed by: SEOGlitz