ரஷ்யாவின் எதிர்கட்சித் தலைவர் Alexei Navalny கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளதாகவும் தற்போது அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜேர்மனியில் அவருக்கு சிகிச்சையளித்து வரும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin ஐ கடுமையாக விமர்சித்து வந்த எதிர்கட்சித் தலைவர் Alexei Navalny கடந்த மாதம் 20 ஆம் திகதி விமான பயணத்தின் போது சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அரசியல் எதிரிகளால் Alexei Navalny உயிருக்கு ஆபத்து என கருத்து தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் ஜேர்மனியிலுள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.