மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு அமைச்சரினால் அறிவிக்கப்பட்டுள்ள விசேட சலுகை!

- Advertisement -

யாழ் மாவட்ட சந்தைகளில் விவசாயிகள் தமது விவசாய பொருட்களை விற்பனை செய்யும் போது,  சந்தைகளில் 10 வீத கழிவு அறவிடும் நடைமுறை நிறுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, வடக்கு மாகாண  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று இன்றையதினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் இடம்பெற்றிருந்தது.

- Advertisement -

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளால் அமைச்சரின் கவனத்திற்கு பல்வேறு பிரச்சினைகள் கொண்டுவரப்பட்டது.

அதற்கமைய வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் விற்பனைக்கு கொண்டு சென்று விவசாய பொருட்களை விற்பனை செய்யும் போது,  சந்தைகளில் 10 வீத கழிவு அறவிடும் நடைமுறை நிறுத்துமாறு அமைச்சரிடம்  கோரிக்கை விடுக்கப்பட்டது.

உடனடியாக அந்த  கழிவு பணம்பெறும் நடவடிக்கையினை இடை நிறுத்துமாறு வடக்கு ஆளுநர் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளரை அமைச்சர்  பணித்ததோடு அவ்வாறு நிறுத்த தவறினால் போலீசார் மூலம் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், வடக்கில் நெல் களஞ்சியம் இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதற்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள உணவு களஞ்சியத்தை உடனடியாக நெல் களஞ்சியத்துக்காக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு அமைச்சர் உடனடியாக அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டார்.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சாள்ஸ், இராஜாங்க அமைச்சர்களான சஷீந்திர ராஜபக்‌ஷ, டி.பி. ஹேரத் மற்றும் மொஹான் டி சில்வா,  அமைச்சின் செயலாளர்கள், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கிராமப்புற மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 313 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குவைத்திலிருந்து வருகைதந்த 7...

அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று!

COPA எனப்படும் அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கோப் மற்றும் கோபா என அழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான  நாடாளுமன்ற குழு மற்றும் அரச கணக்காய்வு குழுவின் உறுப்பினர்கள் கடந்த...

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஊவா மாகாணத்தில் பிற்பகல்...

Developed by: SEOGlitz