மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூன்று விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான  ஒரு நாள்   சர்வதேச போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள்   சர்வதேச போட்டி Manchester இல் நேற்று இடம்பெற்றது.

- Advertisement -

இதில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதற்கமைய, இங்கிலாந்து அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் சிறந்த வீரராக அவுஸ்திரேலிய அணியின் Glenn Maxwell தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து கமல் வெளியிட்டுள்ள தகவல்!

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தினது உடல்நிலையில் சற்றுப்பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியத்தினது உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதற்கு வைத்தியசாலைக்கு  நடிகர் கமல்ஹாசன் சென்றிருந்தார். இந்நிலையிலேயே எஸ்.பி.பி...

சிறுவர்களுக்கான சட்டத்திருத்தங்கள் தொடர்பாக இலங்கைக்கு ஐ.நா பாராட்டு!

சிறுவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களுக்காக UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. தொழில் புரிவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 16 ஆக அறிவித்ததன் ஊடாக, கட்டாயக் கல்விக்கான...

ரஷ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை!

மாத்தறையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு...

நல்லாட்சியில் ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இயங்கவில்லை : அமைச்சர் பிரசன்ன!

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காகவே பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை  கூறியுள்ளார். "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது...

Developed by: SEOGlitz