நாட்டில் தொடர்ந்தும் நிலவிவரும் சீரற்ற வானிலைக்காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்க்படப்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க்ட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை பிரதேச செயலாளர் பிரிவிற்கும், காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கும் முதலாம் கட்ட மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் ருவான்வெல்ல, புளத்கோபிட்டிய தெஹியோவிட்ட, கேகாலை மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மஞ்சள் நிறஅபாய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவிற்கும் மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.