புத்தளம் – அநுராதபுரம் வீதியில் மேம்பாலம் உடைந்து வீழ்ந்ததில் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கனரக வாகனம் ஒன்று குறித்த மேம்பாலம் மீது பயணித்த வேளை இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனவே வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை குறித்த மேம்பாலம் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் எந்தவித புனரமைப்பு நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.