மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமரிடம் இன்று கையளிக்கப்பட உள்ள முக்கிய அறிக்கை!

- Advertisement -

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் குறித்து  ஆராயும் குழுவின் பரிந்துரைகள் இன்று பிரதமரிடம் கையளிக்கப்பட உள்ளன.

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த யோசனையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்க பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் கடந்த 12 ஆம் திகதி ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

- Advertisement -

இந்தக் குழுவின் தலைவராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் செயற்பட்டு வருகின்றார்.

அத்துடன், ஏனைய உறுப்பினர்களாக அமைச்சர்களான அலி சப்ரி,  நிமல் சிறிபால டி சில்வா, உதய கம்பன்பில, விமல் வீரவன்ச மற்றும் இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிலான் பெரேரா, பிரேம்னாத் சி. தொலவத்த ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர்.

இதற்கமைய, இந்த ஒன்பது பேர் கொண்ட குழு நேற்றையதினம் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இல்லத்தில் கூடியது.

இதன்படி, 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் குறித்த பரிந்துரைகள் இன்று பிரதமரிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்!

குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...

பாடும் நிலாவின் மறைவிற்காக கடற்கரையில் வடிவமைத்த ஓவியம்!

புகழ்பெற்ற பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் புரி கடற்கரையில் எஸ்.பி.பி யின் படத்தை வடிவமைத்துள்ளார். இச் சிற்பத்தை சர்வதேச மணற்சிலை வடிவமைப்பாளர் ஒருவர் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tribute to legendary...

எஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல்  அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம்  தாமரைப்பாக்கத்தில் உள்ள  அவரது பண்ணை இல்லம் பகுதியில்   ராணுவ  மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன்  72  குண்டுகள்...

எஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்!

இளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.  

கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கு எச்சரிக்கை!

கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட ஆயிரத்து 200 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பஸ் முன்னுரிமை...

Developed by: SEOGlitz