மெய்ப்பொருள் காண்பது அறிவு

நோர்வூட் பிரதேசத்தில் பஸ் விபத்து : 11 பேர் படுகாயம்!

- Advertisement -

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிவ்வெளிகம பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ள நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று  காலை 7.30  அளவில்  இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

ஹட்டனில் இருந்து பொகவந்தலாவை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும், பொகவந்தலாவையில் இருந்து  அட்டன் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற  பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக  நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 11 பேரில் மூவர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ள நிலையில், 8 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நோர்வூட் பிரதேசத்தில் பஸ் விபத்து : 11 பேர் படுகாயம்! 1 நோர்வூட் பிரதேசத்தில் பஸ் விபத்து : 11 பேர் படுகாயம்! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கட்சிக்குள் இருந்து தொடர்ந்தும் போராடுவேன் : சட்டத்தரணி மணிவண்ணன்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக் கூடாது என்பதற்காக தான் தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து போராடுவேன் என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள...

நிரபராதி என்பதாலேயே சகோதரர் விடுவிக்கப்பட்டார் : ரிஷாட்!

நிரபராதியாக இருந்தமையினாலேயே சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரவித்துள்ளார். வவுனியாவில் இன்று காலை ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக...

கிளிநொச்சிக்கு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க விஜயம்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பனை, தென்னை ஆகியவற்றின் அபிவிருத்திகள் தொடர்பாக விசேடமாக ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ நேரடி விஜயம் மேற்கொண்டு இன்று முழுமையாக ஆராய்ந்தார். அத்துடன், கிளிநொச்சி இயக்கச்சி...

வவுனியா மாவட்ட செயலகத்தில் புதிய கேட்போர் கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது!

வவுனியா மாவட்ட செயலகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கேட்போர் கூடம் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 55 மில்லியன் ரூபா செலவில் குறித்த கேட்போர் கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நிகழ்வு வவுனியா மாவட்ட...

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று...

Developed by: SEOGlitz