மெய்ப்பொருள் காண்பது அறிவு

தீ விபத்துக்குள்ளான கப்பலில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கை!

- Advertisement -

தீ விபத்துக்குள்ளான NEW DIAMOND கப்பலில் உள்ள அனைத்து வகையான எண்ணெய் மாதிரிகளும் இன்று பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இதற்காக விசேட குழுவொன்று குறித்த இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

- Advertisement -

மேலும், தீ விபத்துக்குள்ளான குறித்த கப்பல், தற்போது இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்து 52 கடல் மைல் தூரத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் கப்பல் தொடர்ந்தும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக, சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, சட்டமா அதிபர் மற்றும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட அனைத்து நிறுவனங்களினதும் பிரதானிகள் ஆகியோருக்கு இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன்படி, கடற்படை, துறைமுக அதிகாரசபை, கடலோர பாதுகாப்புத் திணைக்களம், சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் வணிகக்கப்பல் திணைக்களம் ஆகியவற்றின் பிரதானிகள் இந்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் பின்னர், கப்பல் தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என, சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஹேமசிறி பெர்ணான்டோவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : முன்னாள் ஜனாதிபதி மறுப்பு!

உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னேடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்த கருத்தினை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி...

ஹரீன் பெர்ணான்டோவினது கருத்து உண்மைக்குப் புறம்பானது : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ முன்வைத்த கருத்தினை  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுத்துள்ளார். அத்துடன், இந்த கருத்திற்கு...

மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு விசேட சலுகைகள்!

நாட்டில் புதிதாக முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் போது மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு  விசேட சலுகை வழங்குவதற்கு...

பொதுஜன பெரமுனவில் இருந்து முக்கிய நபர் நீக்கம்!

பதுளை மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ஆதர் சில்வா நீக்கப்பட்டுள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பதுளை மாநகர சபையின் தலைவர் பிரியந்த...

மேலும் அதிகரித்த கொரோனா தொற்று!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்  மூவர்  இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியுள்ள மூவருக்கு இவ்வாறு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  3 ஆயிரத்து 287...

Developed by: SEOGlitz