மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழர்களின் பூர்வீக நிலம் குறித்து முல்லைத்தீவு நீதிமன்றம் விசேட அறிவிப்பு!

- Advertisement -
முல்லைத்தீவில் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான குருந்தூர்மலையில், காவலரண் ஒன்றினை அமைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று அனுமதி அளித்துள்ளது.

அத்துடன் குறித்த பிரதேசத்தில் இன முறுகலை ஏற்படுத்துகின்ற வகையில், மதங்களுடன் தொடர்புடைய கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாதெனவும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குருந்தூர் மலைப் பகுதியில் கட்டுமான வேலை ஒன்றினை முன்னெடுப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் முல்லைத்தீவு நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனடிப்படையில் இன்றைய விசாரணை நடவடிக்கைகளில் காவலரண் அமைப்பதற்கான கட்டுமானங்களையே தாம் மேற்கொள்ளவுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தினரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் குறித்த காவலரண் அமைப்பதற்காக மாவட்டசெயலகம், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம் என்பன தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கிய அனுமதிப் பத்திரங்களை அவர்கள் மன்றிற்கு சமர்ப்பித்தனர்.
இதன்போது ஏற்கனவே முல்லைத்தீவு – குருந்தூர் மலைதொடர்பாக இடம்பெற்ற வழக்கில், வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளையின் மூலம் குருந்தூர் மலைப் பகுதியில் கட்டடங்கள் எவையும் இரு தரப்பினராலும் அமைக்க முடியாதென உத்தரவிடப்பட்டது.
எனவே அதன் அடிப்படையில் இரு தரப்பினரும் இணங்கிச் செயற்பட வேண்டும் என நீதிமன்று வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கோவில் நிர்வாகத்தினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளுள் ஒருவரான கனகரத்தினம் சுகாஷ் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
“இன்றையநாள் பொலிசார் மற்றும், தொல்பொருள் திணைக்களத்தினர் எதிர்த்தரப்பினர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

- Advertisement -

தம்மால் விகாரைகள் எதுவும் கட்டப்படவில்லை எனவும், காவலரண்தான் தம்மால் அமைக்கப்படவுள்ளதாக அவர்களால் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைகளின் அடிப்படையில், இரு தரப்பினரும் இணங்கியதுபோன்று, இரு தரப்பினரும் மதத்தோடு தொடர்புடைய எவ்வித கட்டுமானங்களையும் அங்கு மேற்கொள்ளப்போவதில்லை என்ற இணக்கத்தினை தொடர்வதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொல்பொருள் திணைக்களம் அப்பகுதியில் எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதென்பதை, ஒவ்வொருமுறையும் அதுதொடர்பான அறிக்கைகளை மற்றுக்கு சமர்ப்பிக்கவேண்டும் எனவும் இணக்கமான முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளது” என சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

Developed by: SEOGlitz