மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற வானிலை : வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிரதேசங்கள் அறிவிப்பு!

- Advertisement -

நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக  ஆறுகள் சிலவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

களுகங்கை மற்றும் அத்தனகலு ஓய ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதன்காரணமாக  குடா கங்கை மற்றும் மில்லகந்த  ஆகியவற்றுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் தொடர்ந்தும் நிலவிவரும் சீரற்ற வானிலைக்காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு  விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை  தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க பிரதேச செயலாளர் பிரிவிற்கும், காலி மாவட்டத்தின், எல்பிட்டிய, நெலுவ மற்றும் நாகொட  ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மஞ்சள் நிறஅபாய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவிற்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, கேகாலை மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மஞ்சள் நிறஅபாய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, இரத்தினபுரி, கிரியெல்ல, குருவிட்ட மற்றும் எல்பிட்டிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மஞ்சள் நிற அபாய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவிற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவிற்கும் இரண்டாம்  கட்ட செம்மஞ்சள்நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடற்றொழிலாளர்கள் இன்று நண்பகல் வரை   கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று ஆரம்பம்

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ்சேவை முன்னெடுக்கப்படுமெனவும், நாளை முதல்...

ஜப்பானில் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது இதன்படி, 7 லட்சத்து 28 ஆயிரத்து 460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள்...

வாகன விபத்தில் பிரபல நடிகை காலமானார்

லிந்துலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல நடிகை காலமானார் சிரேஷ்ட நடிகை ஹயசிந்த் விஜேரட்ன தனது 75 ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த நடிகை பயணித்த கார் நுவரெலியா தலவாக்கலை...

Developed by: SEOGlitz