மெய்ப்பொருள் காண்பது அறிவு

சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி

- Advertisement -

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

மேன்முறையீட்டு நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையின் குறித்த  வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

- Advertisement -

இதற்கமைய, குறித்த வழக்கை  மீளப்பெறுவதற்கு முறைப்பாட்டாளர்கள் இணங்கியுள்ள நிலையில் வழக்கை தள்ளுபடி செய்வதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம்  தீர்மானித்துள்ளது

2018 ஆம் ஆண்டு  அப்போதைய வட மாகாண சபையின் மீன் வளதுறை அமைச்சராக கடமையாற்றிய தம்மை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு ப. டெனிஸ்வரன் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பில் நாளை புதிய போக்குவரத்து நடைமுறை!

கொழும்பு நகரின் சில  பகுதிகளில் நாளை முதல்  மீண்டும் பஸ் முன்னுரிமை திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை போக்குவரத்து...

நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ...

வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு!

வவுனியா வடக்கு கட்டையர்குளம் மதியாமடு பகுதியின் தனியார் காணியொன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த, காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே இவ்வாறு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கிணற்றை அதன் உரிமையாளர் சுத்தம்...

மீண்டும் மின் தடை ஏற்பட வாய்ப்பு உண்டு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மின்சார கட்டமைப்பு தொடர்பில் முறையற்ற திட்டங்கள் இல்லாத காரணத்தினாலேயே, மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக மின்சார சபையின் பிரதிப்...

IPL இன் இரண்டாவது போட்டி இன்று!

11 ஆவது இந்தியன் பிரிமியர் லிக் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அத்துடன், இந்த போட்டி டுபாயில் இன்று...

Developed by: SEOGlitz