மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் : காரணம் வெளியானது!

- Advertisement -

கொழும்பைச் சூழவுள்ள பல பகுதிகளிலும் இன்று காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி ஒழுங்கை சட்டம் இன்று முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

நாடாளுமன்ற சுற்றுவட்டம் முதல் கொட்டா வீதி வரையிலும், டீ.எஸ். சேனாநாயக்க சந்தி பகுதியிலும் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு – கண்டி வீதியின் பேலியகொடை மற்றும் களணி பாலம் அருகிலும், நுகேகொடை முதல் ஹய்லெவல் வீதி வரையிலான பகுதியிலும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, தெஹிவளை மற்றும் கொஹுவலை முதல் காலி வீதிக்கு பிரவேசிக்கும் பகுதியில் ஏற்பட்டிருந்த வாகன நெரிசல் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சிறுவர்களுக்கான சட்டத்திருத்தங்கள் தொடர்பாக இலங்கைக்கு ஐ.நா பாராட்டு!

சிறுவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களுக்காக UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. தொழில் புரிவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 16 ஆக அறிவித்ததன் ஊடாக, கட்டாயக் கல்விக்கான...

ரஷ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை!

மாத்தறையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு...

நல்லாட்சியில் ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இயங்கவில்லை : அமைச்சர் பிரசன்ன!

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காகவே பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை  கூறியுள்ளார். "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது...

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும்   ஐவர்  அடையாளம் காணப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

Developed by: SEOGlitz