- Advertisement -
கொழும்பு – கண்டி வீதியின் கலகடிஹேன உள்ளிட்ட பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று அதிகாலை கண்டைனர் வண்டியொன்று குறித்த பகுதியில் கவிழ்ந்துள்ள காரணத்தினாலேயே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- Advertisement -
இந்த நிலையில், வாகன நெரிசலைக் கட்படுத்தும் நோக்கில் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நிட்டம்புவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுர குணவர்தன எமது கெப்பிடல் நியூசுக்கு குறிப்பிட்டார்.