சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 30 மில்லியனைக் கடந்துள்ளது.
சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 30 லட்சத்து 7 ஆயிரத்து 331 பேர் கடந்த 24 மணிநேரத்தில் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 300 லட்சத்து 25 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரையான காலப்பகுதியில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 44 ஆயிரத்து 707 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 21 மில்லியன் பேர் குணமடைந்துள்ளனர்.