மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று அச்சம்? : மன்னார் ரயில் நிலையம் மூடல்!

- Advertisement -

கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக மன்னார் பிரதான ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.

வவுனியா பெரியகாடு இராணுவ புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பி வந்த ஒருவர் மன்னார் சௌத்பார் பகுதியல் வைத்து இராணுவத்தினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.

- Advertisement -

இந்த நிலையில், குறித்த நபர் மன்னார் பிரதான ரயில் நிலைய வளாகத்தில் நடமாடியுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, ரயில் நிலையத்தை 14 நாட்களுக்கு முழுமையாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதுகாப்பு காரணங்களுக்காக, ரயில் நிலைய ஊழியர்கள், ரயில் நிலையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பதுளையில் ஜனாதிபதி வெளிளிட்ட முக்கிய அறிவித்தல்……

மக்களின் நலன் கருதி வாய்மூலமாக வழங்கப்படும் பணிப்புரைகளை சுற்றறிக்கைகளாக கருதி நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். இந்த பணிப்புரையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி...

பிரான்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் காயம்……

பிரான்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பெரீஸ் நகரில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை காயமடைந்தவர்களுள் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென  பரீஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதல்தாரி...

மழையுடனான வானிலை தொடர்ந்தும் நிலவும்! மக்களுக்கு எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நிலவுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு,...

பேசுவதற்கு பேச்சுமில்லை சொல்வதற்கு வார்த்தையுமில்லை: இளையராஜா!

தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜா "கந்தர்வர்களுக்காக பாட போய் விட்டீரா?" எனக்கூறி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். https://www.facebook.com/Ilaiyaraaja/posts/3551745441536644

இந்தியாவில் கொரோனா தொற்றின் அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 7 ஆயிரம் பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 957 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை  இந்தியாவில்...

Developed by: SEOGlitz