மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றுடன் மேலும் சிலர் அடையாளம்..!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய மூவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 14 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 983 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைர ஸ் தொற்றுக்குள்ளான 177  பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 51 ஆயிரத்து 792 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், நேற்றைய தினத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 464  PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்மூலம் கொரோனா தொற்றுக்குள்ளான 14 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தேங்காயின் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை திட்டம்!

தேங்காயின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையிலான திட்டமொன்று  தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் தேங்காய்களின் விலை உயர்வடைந்துள்ளமை தொடர்பில், தென்னைப் பயிர்ச்செய்கை...

நாட்டில் இயற்கையின் பாதிப்பு காரணமாக பாரிய உயிரிழப்புக்கள் பதிவு!

நாடு முழுவதும் ஏதேனும் ஓர் இடத்தில், இயற்கையின் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இதன் காரணமாக ஆண்டுதோறும்  நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. மேலும், உயிரிழப்பைவிட, பல மடங்கு பொருளாதாரச் சேதமும் ஏற்படுகின்றது. பலர்,  தங்களது வாழ்விடங்களையும்,  ஆண்டுக்கணக்கில்...

கிராமப்புற மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 313 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குவைத்திலிருந்து வருகைதந்த 7...

அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று!

COPA எனப்படும் அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கோப் மற்றும் கோபா என அழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான  நாடாளுமன்ற குழு மற்றும் அரச கணக்காய்வு குழுவின் உறுப்பினர்கள் கடந்த...

Developed by: SEOGlitz