மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கின் முக்கிய பிரச்சினைகள் பிரதமர் கவனத்திற்கு…!

- Advertisement -

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மெத்தடிஸ்ட் தேவாலயத்தின் பாதிரியார்கள் மற்றும் அரச அதிகாரிகள் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

- Advertisement -

இதன்போது, கிழக்கு மாகாணத்தின் திருக்கோவில், கல்முனை, அம்பாறை போன்ற பிரதேசங்களின் நிலவும் பாடசாலை வசதி, வைத்தியசாலை குறைப்பாடுகள், போக்குவரத்து பிரச்சினை மற்றும் கல்வி துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி, ஆடை மற்றும் பிற தொழிற்சாலைகளுடன் கூடிய தொழிற்துறை நகரத்தை நிறுவுதல், தேவாலயங்களை ஒழுங்கு விதிகளின் கீழ் கட்டியெழுப்புதல், கிறிஸ்தவ மத ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் பிள்ளைகளை கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது ஏற்படும் பிரச்சினைகள் என்பன தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ...

வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு!

வவுனியா வடக்கு கட்டையர்குளம் மதியாமடு பகுதியின் தனியார் காணியொன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த, காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே இவ்வாறு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கிணற்றை அதன் உரிமையாளர் சுத்தம்...

மீண்டும் மின் தடை ஏற்பட வாய்ப்பு உண்டு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மின்சார கட்டமைப்பு தொடர்பில் முறையற்ற திட்டங்கள் இல்லாத காரணத்தினாலேயே, மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக மின்சார சபையின் பிரதிப்...

IPL இன் இரண்டாவது போட்டி இன்று!

11 ஆவது இந்தியன் பிரிமியர் லிக் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அத்துடன், இந்த போட்டி டுபாயில் இன்று...

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 வீதமான வாகனங்கள் விற்பனை!

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 வீதமான வாகனங்கள் விற்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தநிலை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தொடருமென தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், குறிப்பிட்ட...

Developed by: SEOGlitz