மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.தே.கவின் செயற்குழு கூட்டம் : புதிய தலைமைத்துவம் குறித்து தீர்மானம்?

- Advertisement -

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில்,  இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்தக்  கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

- Advertisement -

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் மற்றும் தேசியப் பட்டியல்  விடயம் தொடர்பில் இதன்போது தீர்வு காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைமைத்துவத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ருவான் விஜேவர்தன, வஜிர அபவேர்தன மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரில் ஒருவர் செயற்குழுவில் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,  முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் விருப்பம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம் – ஒருவர் உயிரிழப்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி – பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இன்று காலை இடிந்து வீழ்ந்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சுமார் ஒன்றரை...

புத்தளத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கண்காணிப்பு விஜம்

புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றைய தினம் கண்காணிப்பு விஜமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்படி, மதுரங்குளி மற்றும் வாழைச்சேனை தோட்டங்களின் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்து...

கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் ஒன்றரை மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம்

கண்டி - பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது

ஆவா குழுவில் இருந்து வெளியேறிய “தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  மேற்கொள்ளப்பட்ட  திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்  போதே...

Developed by: SEOGlitz