மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்லைப்பகுதியில் இந்திய இராணுவம் அத்துமீறல் : சீனா குற்றச்சாட்டு!

- Advertisement -

இந்திய இராணுவ வீரர்கள் சட்டவிரோதமான முறையில் எல்லையைக் கடந்துவந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது.

இந்திய மற்றும் சீன நாடுகளுக்கிடையில், அண்மைக்காலமாக எல்லைப் பிரச்சினை அதிகரித்து வருகின்றது.

- Advertisement -

இந்த நிலையில், இந்தியாவின் லடாக் பகுதியில் சீன இராணுவம் அத்து மீறி செயற்பட்டதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

அத்துடன், இரண்டு நாட்டு இராணுவமும் எல்லையில் தமது  படைகளை நிலை நிறுத்தியுள்ளன.

மேலும், எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைக்கு தீர்வுகளை முன்வைக்கும் வகையில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது

இந்த நிலையிலே,  லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியைக் கடந்துவந்து,  இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சீன இராணுவம் குற்றம்  சுமத்தியுள்ளது.

அத்துடன், இவ்வாறான ஆபத்தான செயற்பாடுகளை இந்திய இராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் சீன இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, கடந்த 45 வருடங்களில் முதல் தடவையாக இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், இந்திய சீன நாடுகளுக்கிடையில் துப்பாக்கியை பயன்படுத்துவதை தவிர்க்கும் ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எதிர்பாராத வெற்றியை தன்வசப்படுத்தியது Colombo Kings…!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4 ஆவது போட்டியில் Colombo Kings அணி 34 ஓட்டங்களினால் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்தது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற...

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு – இன்றைய நிலவரம் முழுமையாக…

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

Developed by: SEOGlitz