பிரேமலால் ஜயசேகரவின் பதவிப்பிரமாணத்தினையடுத்து சமகி ஜனபலவேகய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதன்போது நாடாளுமன்றத்தில் பெரும் அமளிதுமளிக்கு மத்தியில் அவரது பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.
இவ்விடயம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து சமகி ஜனபலவேகய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.