இருபதுக்கு 20 போட்டிகளின் தரவரிசையில் முதல் இடத்தை அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் பகிர்ந்துகொண்டுள்ளன.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களில் தற்போது விளையாடி வருகின்றன.
இதன்படி, இருபதுக்கு 20 தொடர் southampton இலும், ஒருநாள் தொடர் manchester இலும் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், நடந்து முடிந்துள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது மற்றும் இரண்டாவது இருபதுக்கு 20 ஆட்டங்களில் வெற்றிபெற்றதன் மூலம் T-20 தரவரிசையில் அவுஸ்திரேலிய அணிக்கு இணையாக 273 புள்ளிகளை இங்கிலாந்து அணி பெற்றுள்ளது.
இதற்கமைய, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தற்போது முதலாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளன.
இந்நிலையில், இன்று இடம்பெறவுள்ள 3 ஆவது இருபதுக்கு 20 ஆட்டத்தை வெற்றி பெறும் அணி தரவரிசையில் முதலாவது இடத்தை பிடிக்குமென சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.