இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர் முதலாவது போட்டி Manchester இல் பகல் இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரில் George butler, Jofra archer, Mark wood ஆகிய இங்கிலாந்து வீரர்கள் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை வெற்றிபெற்றதன் பின்னர் முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் பங்கேற்கின்றனர்.
மேலும், இந்தப் போட்டி, 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி கான் சுற்றான சுப்பர் லீக் போட்டியில் இந்தத் தொடரும் கவனத்தில் கொள்ளப்படவுள்ளது.