மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரணிலுக்கு மீண்டும் அறிவித்தல்

- Advertisement -

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் பழிவாங்கல்கள்  தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் 25 ஆம் திகதி முன்னிலையாகுமாறு  ரணில் விக்ரமசிங்கவுக்கு  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.

- Advertisement -

இதனிடையே  எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னதாக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் தொடர்பிலான  விசாரணைகளின் நிமித்தம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,  இரா சம்பந்தன்.  அநுரகுமார திசாநாயக்க,  எம் .ஏ சுமந்திரன்   உள்ளிட்ட மேலும் சிலர்  ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம் – ஒருவர் உயிரிழப்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி – பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இன்று காலை இடிந்து வீழ்ந்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சுமார் ஒன்றரை...

புத்தளத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கண்காணிப்பு விஜம்

புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றைய தினம் கண்காணிப்பு விஜமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்படி, மதுரங்குளி மற்றும் வாழைச்சேனை தோட்டங்களின் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்து...

கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் ஒன்றரை மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம்

கண்டி - பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது

ஆவா குழுவில் இருந்து வெளியேறிய “தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  மேற்கொள்ளப்பட்ட  திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்  போதே...

Developed by: SEOGlitz