மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் மீண்டும் ஆரம்பம்

- Advertisement -

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த 1 இலட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த திட்டத்திற்கு அமைய, வேலையற்ற பட்டதாரிகள்  50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.

அத்துடன், ஏனைய ஒரு இலட்சம் பேர் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதி பதவியேற்று சில வாரங்களில் 50 ஆயிரம் பட்டதாரிகள் மற்றும் ஒரு இலட்சம் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக குறித்த வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை நிறுத்திவைக்குமாறு  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதற்கமைய, குறித்த திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

தொடர்ந்து அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பணியில் அமர்த்தப்பட உள்ள பட்டதாரிகளில் பெயர் பட்டியல் எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அனுப்பிவைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, தகுதி இருந்தும் தெரிவு செய்யப்படாத பட்டதாரிகள் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புகளை மேற்கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இரு நாடுகளுக்கிடையிலான விமான சேவைக்கு தடை! காரணம் என்ன?

இந்தியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கிடையிலான விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து டுபாய் சென்ற விமானங்களில் பயணித்த பயணிகளில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, டுபாய் இந்தத் தடை உத்தரவைப்...

நாட்டின் சில மாவட்டங்களில் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும்- சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்திலும், வடமேல் மாகாணத்திலும் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்க கூடுமென எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில்...

ரஷ்யாவில் கொரோனா தொற்று குறித்து தற்போதைய நிலவரம்!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 ஆயிரத்து 905 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்து 91 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகஸ்காரில் இருந்து வருகைத்தந்த ஒருவர் மற்றும் ஓமானில் இருந்து வருகை...

இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலனை!

மத்திய கிழக்கில் இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு மேலும் ஐந்து நாடுகள் பரிசீலித்துவருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி Mark Meadows  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே Wisconsin...

Developed by: SEOGlitz