மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சரவை அமைச்சர்கள்  மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்று பதவியேற்றனர்!

- Advertisement -

ஶ்ரீ லங்கா பொதுஜனபெரமுன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள்  மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்று தங்களது கடமைகளை  பொறுப்பேற்றுள்ளனர்.

இதன்படி போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர்  ரோஹித அபேகுணவர்தன  ராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட,   டீ பி ஹேரத்,  தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர்  ஜீவன் தொண்டமான்  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க  அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோர் இன்று தங்களது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.

- Advertisement -

இதேவேளை சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர ,  கமத்தொழில்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ,  ,வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சீ பி ரட்னாயக்க  மற்றும்  ராஜாங்க  அமைச்சர்களான  சன்ன ஜயசுமன, சதாசிவம் வியாழேந்திரன்,  ஜானக்க வக்கும்புர   உள்ளிட்ட பலர் இன்று தங்களது கடமைகளை  பொறுப்பேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து...

சிறுபான்மையினரின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கப்படும் : பிரதமர் மஹிந்த!

தமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புக்களையும் புரிந்து கொள்ளும் வகையில் இலங்கை செயற்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசியலமைப்பின் 13 ஆவது...

புதிய அரசியலமைப்பின் மூலம் மனித உரிமை மீறல் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

20 ஆவது திருத்ததின் ஊடாக ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாத காரணத்தினால், பாரிய மனித உரிமை மீறல் ஏற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவிக்கின்றார். 20...

நாட்டில் இனிமேல் பயங்கரவாதத்திற்கு இடமில்லை : மதுர விதானகே!

தற்போதைய அரசாங்கம், நாட்டை பாரிய அழிவு நிலைமையிலிருந்து காப்பாற்றியுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவிக்கின்றார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர்...

அரசியலமைப்பு விவகாரம் : உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் மீதான பரிசீலனைகள் ஆரம்பம்!

20 ஆவது திருத்த சட்டமூலத்தை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் நடவடிக்கை சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜய சூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள்...

Developed by: SEOGlitz