மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.தே.க.வின் தலைமைத்துவம்  தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்!

- Advertisement -

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம்  தொடர்பில்  இன்று இறுதித் தீர்மானம்  எட்டப்படவுள்ளதாக கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க  தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய செயற்குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ள நிலையில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் கட்சியின் உப தலைவர்  ரவி கருணாநாயக்க   இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில்  கட்சித்தலைவர்  தலைவர்  ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ள நிலையில் இன்று மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதனிடையே ஐக்கிய தேசியக்  கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சிறுவர்களுக்கான சட்டத்திருத்தங்கள் தொடர்பாக இலங்கைக்கு ஐ.நா பாராட்டு!

சிறுவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களுக்காக UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. தொழில் புரிவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 16 ஆக அறிவித்ததன் ஊடாக, கட்டாயக் கல்விக்கான...

ரஷ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை!

மாத்தறையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு...

நல்லாட்சியில் ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இயங்கவில்லை : அமைச்சர் பிரசன்ன!

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காகவே பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை  கூறியுள்ளார். "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது...

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும்   ஐவர்  அடையாளம் காணப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை குறித்து சற்று முன் வெளியான அதிர்ச்சித் தகவல்!

தமிழ் சினிமாவின் பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணித்தின் உடல்நிலை குறித்து வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இன்று மாலை வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலையில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...

Developed by: SEOGlitz