மெய்ப்பொருள் காண்பது அறிவு

நானுஒயா பிரதேசத்தில் பாரவூர்தி விபத்து!

- Advertisement -
நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
தலவாகலையில் இருந்து பெலவத்த பகுதிக்கு பால் ஏற்றிச்சென்ற பார ஊர்தியானது ரதாலை சமரசெட் பகுதியில் வீதியின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லொறிகளில் மோதுண்டதால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.
பால் ஏற்றிச்சென்ற பார ஊர்தியின் சாரதி தூக்கக் கலக்கத்தில் வாகனத்தினைச் செலுத்தியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நானுஒயா பிரதேசத்தில் பாரவூர்தி விபத்து! 1 நானுஒயா பிரதேசத்தில் பாரவூர்தி விபத்து! 2
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் ஒன்றரை மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம்

கண்டி - பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது

ஆவா குழுவில் இருந்து வெளியேறிய “தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  மேற்கொள்ளப்பட்ட  திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்  போதே...

அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் கோரி தாய்லாந்தில் போராட்டம்

அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் வேண்டுமெனக் கோரி தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு  போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்,...

Developed by: SEOGlitz