மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களுக்கான சிறந்த சேவையினை முன்னெடுப்பேன் : இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதி!

- Advertisement -

வழங்கப்பட்ட அமைச்சுப் பொறுப்பின் மூலம் மக்களுக்கான சிறந்த ஒரு சேவையினை முன்னெடுப்பேன் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் இன்று கடமையேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

- Advertisement -

“மலையகத்தில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தினை உருவாக்குவேன்.

தோட்ட மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் வேலை செய்யக்கூடிய நல்ல அமைச்சு ஒன்று இன்று எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த அமைச்சின் மூலம் எம் மீது நம்பிக்கை வைத்த தோட்ட மக்களுக்கும் அனைத்தின மக்களுக்கும் நல்லதொரு எதிர்காலத்தினை உருவாக்குவேன்.

என் மீது நம்பிக்கை வைத்து எனது தந்தையின் அமைச்சினை எனக்கு வழங்கியதற்காக ஜனாதிபதிக்கும் பிரமருக்கும் நன்றி கூற வேண்டும்.

ஆகவே இந்த  அமைச்சின் மூலமாக மலையக மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் சிறந்த ஒரு சேவையினை முன்னெடுப்பேன்.

இந்த நேரத்தில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் கடமைப் பட்டுள்ளேன்” என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன், தேர்தலில் போட்டியிட்ட இ.தொ.கா வேட்பாளர்கள், உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின் நியமனம்: பேராயர் ஜஸ்ட்டின்!

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை நியமிப்பதாக Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி தெரிவித்துள்ளார். Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மறைமாவட்ட சபையின் கோரிக்கைக்கமைய, யாப்பின்...

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

பெருமளவிலான கழிவுத் தேயிலை கைப்பற்றல்!

எல்பிட்டிய பிரதேசத்தில் 5 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. ரத்கம பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. காலி - எல்பிட்டிய இணிகொடவல பிரதேசத்தில்...

Developed by: SEOGlitz