மெய்ப்பொருள் காண்பது அறிவு

துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்தப் போராட்டம் இடைநிறுத்தம்!

- Advertisement -

கொழும்புத் துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்தப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலின் பின்னர் குறித்தப்  போராட்டம் இடைநிறுத்தப்பட்டதாக  துறைமுக ஊழியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

- Advertisement -

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை வெளிநாட்டுக்கு வழங்குவதை எதிர்த்து துறைமுக ஊழியர்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தனர்.

கொழும்புத் துறைமுகத்தின் 23 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.

இந்த நிலையில், கொழும்புத் துறைமுக ஊழியர்களின் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுக தொழிற்சங்கங்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், வேலை நிறுத்தப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டதாக துறைமுக ஊழியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு  

மாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...

புதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்

இம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த  இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள  விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல்  1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம்  2...