மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மற்றும் இந்திய நாடுகளின் பாதுகாப்பு உறவுகள் குறித்து விசேட கலந்துரையாடல்!

- Advertisement -

இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவினை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்படி, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலாசகர் Captain Vikas Sood மற்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா ஆகியோருக்கிடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாட்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு, உறுதியான அர்ப்பணிப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கிடையேயான பாரம்பரிய நல்லுறவுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் குறிப்பிட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km  வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி  பிரித்தானியாவில்  Southampton மைதானத்தில்  நேற்று மாலை 6.30...

3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை

3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு  நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் Ahmed Ali Al Mualla மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கிடையிலான பிரியாவிடை சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...