மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெலிகடை சிறைச்சாலைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற பூனை!

- Advertisement -

வெலிகடை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப் பொருள் கொண்டுசெல்லவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும்  பூனை ஒன்றை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வெலிகடை சிறைச்சாலைக்கு முன்னால் கழுத்தில் சிறிய பொதியுடன் உலாவிக்கொண்டிருந்த பூனையொன்றை சிறைச்சாலை புலனாய்வு பிரிவு அதிகாரிகள்  சோதனைக்கு உட்படுத்திய போது,   அந்தப் பொதிக்குள் ஹெரோயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

குறித்த பூனையின் கழுத்தில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த பொதிக்குள் இருந்து 1.7 கிராம் ஹெரோயின், 2 சிம் அட்டைகள் மற்றும் memory card  ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பூனையை பொரளை பொலிஸாரிடம்  ஒப்படைத்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார் மேலும் அம்பாந்தோட்டை...

இரத்தினபுரி மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கை மும்முரம்

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பிக்கப்படடுள்ள நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் மக்கள்  வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார் மேலும் இரத்தினபுரி...

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பம்

இலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது. இன்று காலை 7 மணிக்கு பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் மாலை 5 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களில் 12...

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மித்தது!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 849 உயிரழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து எண்ணூற்று...

அமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km  வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...