மெய்ப்பொருள் காண்பது அறிவு

பூட்டானில் முதல் முறையாக முழுமையான ஊரடங்கு அமுல்!

- Advertisement -

பூட்டானில் முதல் முறையாக முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, பூட்டானில் கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.

- Advertisement -

இந்தநிலையில் குவைத்தில் இருந்த பூட்டான் திரும்பிய 27 வயது பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பூட்டனில் நாடு முழுவதும் முதல் முறையாக முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 21 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில், பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டு மக்கள் அனைவரையும் வீடுகளில் இருக்குமாறு பூட்டான் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் பூட்டான் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பரந்தன் – பூநகரி பிரதான வீதி பூட்டப்பட்டது!

கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதன்படி பரந்தன் பூநகரி வீதியூடாக எதிர்வரும் மூன்றாம்...

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் ஒழுங்காகச் செயற்படவில்லை : அரவிந்தகுமார்!

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் முறையற்ற போக்கை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   CAPITAL...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz