- Advertisement -
செஞ்சோலை படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்படவிருந்த நிலையிலேயே பொலிஸார் தடை விதித்துள்ளதாக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006 ஆம் ஆண்டு இலங்கை விமானப் படையினர் குண்டுத் தாக்குதலை நடாத்தியிருந்தனர்.
இத்தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப்பட்டதின் நினைவேந்தல் நிகழ்வுகள் வருடந்தோறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் நினைவேந்தல் குழுவால் நாடாத்தபட்டு வந்த நிலையில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ் வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்க பட்டு வந்த நிலையில் ஏற்பாட்டாளர்களை அழைத்த புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க கூடாதென உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் அவ்வாறு நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -