மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.தே.க. நெருக்கடி : அவசரமாகக் கூடும் மத்திய செயற்குழு!

- Advertisement -

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று  இடம்பெறவுள்ளது.

கட்சித் தலைமையகத்தில் இன்று முற்பகல் 9.30 அளவில் மத்திய செயற்குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் கட்சித்தலைவர் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் சிறிகொத்தவில் நேற்றைய தினமும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் கட்சித் தலைமைத்துவத்திற்கு  இதுவரை சிரேஷ்ட உறுப்பினர்கள்   எட்டு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம்,  உப தலைவர் ரவி கருணாணாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க,  பொருளாளர்  தயா கமகே, ருவன் விஜயவர்தன,  அர்ஜூன ரணதுங்க,  பாலித ரங்கே பண்டார மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே ஐக்கிய தேசியக்  கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவரை   தெரிவு  செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை எந்தவித தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பரந்தன் – பூநகரி பிரதான வீதி பூட்டப்பட்டது!

கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதன்படி பரந்தன் பூநகரி வீதியூடாக எதிர்வரும் மூன்றாம்...

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் ஒழுங்காகச் செயற்படவில்லை : அரவிந்தகுமார்!

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் முறையற்ற போக்கை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   CAPITAL...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz