மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

- Advertisement -

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தொழில் அமைச்சில் நேற்றைய தினம் தமது கடமைகளை  பொறுப்பேற்ற அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன், தொழில் அமைச்சு தொழிலாளர்களுக்காக சேவையாற்றும் இடமாக இருக்க வேண்டுமே அன்றி தொழில் வழங்குநர்களின் நிறுவனமாக இருக்கக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும், கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் குறித்தும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எழுத்து – வாய்மொழிப் பரீட்சைகளுக்கு பதிலாக மாற்று முறையை பின்பற்ற உள்ளூராட்சி அமைச்சு தீர்மானம்!

அரச கரும மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்காக எழுத்து மற்றும் வாய்மொழிப் பரீட்சைகளுக்கு பதிலாக மாற்று முறையை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக குறிப்பிட்ட மணித்தியால அளவிலான பாடத்திட்டத்தை பூர்த்தி செய்யும் வாய்ப்பை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரச சேவைகள்,...

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 339 பேர் இன்று நாட்டுக்கு வருகை!

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 339 பேர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 3 விசேட விமானங்களின் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக, எமது விமான நிலைய...

தபால் சேவையை பொருளாதாரத்தின் பிரதான பங்காக மாற்றலாம்: ஜனாதிபதி வலியுறுத்தல்!

இலங்கை தபால் சேவையை தேசிய பொருளாதாரத்தின் பிரதான பங்காக மாற்ற முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதன்படி, சர்வதேச தபால் சேவை தொடர்பில் கவனஞ் செலுத்தி, பரந்த அளவிலான சேவை வாய்ப்புகளை...

20 ஆவது திருத்தம் எதிர்காலத்தில் பாதிப்பாக அமையும்: விஜயபால குற்றச்சாட்டு!

20 ஆவது திருத்தம், அரசாங்கத்திங்கு எதிர்காலத்தில் பாதிப்பாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவிக்கின்றார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் அத்துடன்,...

IPL தொடரின் 11 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணிக்கு வெற்றி!

13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 11 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணி, 15 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று இரவு இடம்பெற்றிருந்தது. இதன்படி,...

Developed by: SEOGlitz