மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி!

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில்  இங்கிலாந்து அணி வெற்றி  நான்கு விக்கெட்டுகளால் பெற்றுள்ளது.

மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர் Southampton மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது.

- Advertisement -

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில், பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இதன்படி, இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியைச் சேர்ந்த Jonny Bairstow தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட  இந்தத் தொடரில் இரண்டுக்கு பூச்சியம் என்ற புள்ளிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி  முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்கா; இசையாஸ் புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரை மற்றும், வட கரோலினா ஆகிய பகுதிகளிலேயே குறித்த புயலின்...

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி  பிரித்தானியாவில்  Southampton மைதானத்தில்  நேற்று மாலை 6.30...

3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை

3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு  நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் Ahmed Ali Al Mualla மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கிடையிலான பிரியாவிடை சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...