மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராஜாங்கனையில் மீண்டும் கொரோனா தொற்று? : 90 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

- Advertisement -

அனுராதபுரம் ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த சுமார் 90 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக பிரதேச தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தேஜன சோமதிலக தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் ராஜாங்கனை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறித்த மாணவி முதலாவது முறை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  மீண்டும் அவர்  பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், அவரின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியர் தேஜன சோமதிலக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த மாணவி கடந்த 10ஆம் திகதி பாடசாலைக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவர் ராஜாங்கனை பகுதியில் முன்னதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரின் குடியிருப்பை அண்மித்து வசித்து வருவதாகவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த மாணவியின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரையில் அவரது வீட்டை அண்மித்து வாழும் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் தேஜன சோமதிலக தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மாணவி கல்வி பயின்ற பாடசாலையைச் சேர்ந்த 50 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தேஜன சோமதிலக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின் நியமனம்: பேராயர் ஜஸ்ட்டின்!

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை நியமிப்பதாக Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி தெரிவித்துள்ளார். Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மறைமாவட்ட சபையின் கோரிக்கைக்கமைய, யாப்பின்...

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

பெருமளவிலான கழிவுத் தேயிலை கைப்பற்றல்!

எல்பிட்டிய பிரதேசத்தில் 5 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. ரத்கம பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. காலி - எல்பிட்டிய இணிகொடவல பிரதேசத்தில்...

தற்போதைய அரசாங்கம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் கருத்து!

மக்களை கேலிக்கு உட்படுத்தும் அரசாங்கமொன்றே தற்போது உருவாகியுள்ளதாக புத்தளம் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவிக்கின்றார். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். CAPITAL...

Developed by: SEOGlitz